திருமலையில் தமிழரசு தலைமைக்கதிரைக்கு முடிவு!



இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக்கதிரைக்கான போட்டி உச்சம் பெற்றுள்ள நிலையில் திருகோணமலையில் மாவட்டத்தில் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற இருப்பதாக அறவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளதாகவும், 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூட உள்ளதாகவும் 27ம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளதுடன் 28 ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு இடம் பெற உள்ளதாகவுட் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளமையால் பிரதேச ரீதியாக பிரதிநிதித்துவத்தை கூட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் திருகோணமலை தொடர்;பில் இரா.சம்பந்தனின் கருத்துக்களுக்கு அமைவாக மேலதிகமாக ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பவும் ஏற்பாடாகியிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்கிடையே தலைமையை கைப்பற்றுவது தொடர்பிலான போட்டி உச்சமடைந்துள்ள நிலையில் தனது ஆதரவாளர்களை உள்ளீர்ப்பதில் சுமந்திரன் காய் நகர்த்தல்களை முன்னெடுப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.


No comments