சேறுபூச தயாராகும் காவல்துறை!





இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து முடக்கிவிட இலங்கை காவல்துறை முற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இலங்கை காவல்துறையினர் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நெருக்கடிகளை வழங்கி விசாரணைகளை முன்னெடுப்பதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக இணைப்பாளர் முன்னின்று வருகின்றார்.

யுத்த முடிவின் பின்னராக பதவியை பொறுப்பேற்ற நிலையில் கடந்த 14வருடங்களிற்கு மேலாக யாழில் பணியாற்றிவருகின்ற இணைப்பாளராக கனகராசா படையினரின் சித்திரவதைகள் மற்றும் காவல்துறையின் கைதுகளிலிருந்து பல முன்னாள் போராளிகளை பாதுகாத்துமிருந்தார்.

இந்நிலையில் பணியாளர் ஒருவரிற்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாண சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரே நேற்று இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர், முறைப்பாட்டாளர் மற்றும் ஒரு பெண் உத்தியோகத்தர் விசாரணைக்காக இன்று பிற்பகல் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் முறைப்பாட்டின் நம்பகத்தன்மையினையடுத்து விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இணைப்பாளர் கனகராசா மீது சமூக ஊடகங்கள் வழி சேறுபூச காவல்துறை மும்முரமாகியுள்ளது.


No comments