யாழில் 480 உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு


இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில், தெரிவு செய்யப்பட்ட  வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில்  நடைபெற்ற நிகழ்விலேயே 480 பேருக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments