யாழ்ப்பாணத்திற்கு சிங்களவர்கள் வரமாட்டார்கள்!அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் நேற்று(09.11.2023) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட  

தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள்  தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்டவர்கள் இருக்கின்ற நிலையில், பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில்,  குறித்த விவகாரம்  ஓரவஞ்சனையான தீர்மானங்களாக பாதிக்கப்படுகின்றவர்களினால் பார்க்கப்படும் என்பதுடன் தேவையற்ற அரசியல் குழப்பங்களுக்கும் வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காடப்பட்டது

கருத்துக்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் மூலமே வெற்றிடங்களை நிரப்புவதற்கு முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அண்மையில் யாழ் பல்கலைக் கழகத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த  ஏழு சிற்றூழியர்களை நியமிப்பதற்கான முன்னெடுப்பு,  சுட்டிக்காட்டத்தக்கது.

No comments