மயிலத்தமடு:மாணவர்கள் களத்தில்மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பினை நிறுத்தி, மேய்ச்சல் தரையினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதுவிட்டால், வட-கிழக்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றுதிரட்டி பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பினை கண்டித்தும் கால்நடை பண்ணையாளர்களுக்கு நீதிகோரியும் இன்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால்; கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மேய்ச்சல் தரையை மீட்டுத் தருமாறு, கால்நடைப் பண்ணையாளர்கள் 49வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கான தீர்வு தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகிறது.

மேய்ச்சல் தரைப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படும் கால்நடைகள் மிக மோசமான முறையில் கொல்லப்படுகின்றன.

இந்நிலையிலேயே கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments