நிர்மலாவும் சீன தூதரும் ஏட்டிக்குப்போட்டி!
இந்திய நிதி அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு நாளை வருகை தரவுள்ள நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் (06)ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர், உள்ளிட்டவர்களுடன் உத்தியோக பூர்வ சந்திப்புகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிடத் திட்டமிட்டிருப்பதாகச் சீனத் தூதரக வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.
அதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் உதவி வழங்கும் திட்டமும் அன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதனிடையே இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலையிலுள்ள திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
பின்னராக நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள இந்திய நிதியமைச்சர் பலாலி விமான நிலையம் ஊடாக சென்னை திரும்பவுள்ளார்.
Post a Comment