மது போதையில் மோதிக்கொன்றார்?மது போதையில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் பொதுமகனை மோதி கொன்றுள்ளார்.

மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை  ஒன்றில்  மோதிய விபத்தில் அங்கு பணிபுரிந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனத்தை ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரே செலுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமானவர்.

வாகனத்தை செலுத்திய மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

No comments