காசாப் பகுதியை சுற்றிவளைத்த இஸ்ரேலிப் படைகள்!!


காசா நகரை முழுமையாகச் சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரவித்துள்ளது. வடக்கு காசாவில் விரிவாக்கப்பட்ட தரைப்படை நடவடிக்கையின் சில நாட்களுக்குப் பின்னர் இஸ்ரேலிய துருப்புக்கள் காசா நகரை சுற்றி வளைத்துள்ளன என இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார்.

இதேநேரம் காசாவைச் சூழ்ந்த இஸ்ரேல் இராணுவ வீரர்களை கறுப்புப் பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பல திசைகளில் இருந்து காசா நகரை நோக்கி முன்னேறும் போது ஹமாஸ் இராணுவ நிறுவல்கள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் அழித்ததாக இஸ்ரேலிப் பாதுகாப்புப் படை கூறியது. 

ஹமாசின் உள்கட்டமைப்பு, பொதுமக்களின் பகுதிகளிலும் குறிவைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கியுள்ளனர். ஹமாஸ் படைகள் மற்றும் இராணுவ தளபாடங்கள் சிவிலியன் உள்கட்டமைப்பில் உட்பொதிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பலமுறை கூறி வருகிறது.

இஸ்ரேல், அமெரிக்கா, யேர்மனி, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

அடர்ந்த குடியேறிய நகர்ப்புறத்தில் ஹமாஸ் போராளிகளை முற்றிலுமாக வேரறுப்பது நீண்ட மற்றும் கடினமான செயலாக இருக்கும் என்று இராணுவ ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு உதவி பொதுமக்களை சென்றடைய ஐ.நா. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு தங்குமிடங்கள் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.

ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பாடசாலை ஒன்றில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments