காசா மீது ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை களமிறக்கியது அமொிக்கா


இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களைத் தேடும் முயற்சியில் அமெரிக்கா காசா மீது கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை பறக்கிறது என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்கும் மேலாக ட்ரோன் விமானங்களை பறக்கவிட்டு அவர்களின் இருப்பிடங்களைத் தேடி வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

ஹமாஸின் விரிவான சுரங்கப்பாதை வலையமைப்பில் காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 239 பணயக் கைதிகள் இருக்கின்றனர். அதில் 10 அமெரிக்கர்கள் இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments