டென்மார்க்கில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு

04.11.2023 சனிக்கிழமை மாலை 18:00 மணிக்கு டென்மார்க் கொல்பேக் நகரில், கிளிநொச்சி மாவட்டத்தில் 02.11.2007 அன்று சிறிலங்கா வான் படையின் குண்ட
வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்” பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன், உட்பட ஏனைய மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு மிகுந்த எழுச்சியுடன் நடந்தேறியது. இதில் வழமையான ஒழுங்கமைப்புடன் உணர்வெழுச்சியுடன் பொதுமக்களால் பொதுச் சுடர், ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் மற்றும் அகவணக்கத்துடன் மாவீரர் கானங்கள் ஒலிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.
Post a Comment