ருக்கி பெனான்டோ:எதுவும் மாறவில்லை!



மட்டக்களப்பு மாதவன மயிலத்தமடு பண்ணையாளர்கள் விவகாரம் தொடர்பாக கள நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக மயிலத்தமடுவுக்குச் சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் இலங்கை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிரேஸ்ட காவல்துறை மா அதிபரின் ஆலோசனைக் அமைவாக அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை எனவும் தெற்கை தளமாக கொண்டு செயல்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெனான்டோ தெரிவித்துள்ளார்.

உண்மைகளை கண்டறியும் நோக்கத்துடன் தெற்கில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வந்து ஆதரவு தெரிவிக்கவும் அதனுடைய உண்மை நிலையை அறிவதற்காக குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.



No comments