சீன சாமானை காணோம்!

 


சீனாவின் பௌத்த சங்கம் இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கம்  ஏற்பாட்டில் பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால்  இலங்கையில் உள்ள  வறிய மக்களுக்கு 7.000 ரூபா பெறுமதிமதியான  உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுவருகின்றதுஎனினும் பொதியில் 1700 பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏழாயிரம் ரூபா பெறுமதிமதியான  உணவுப் பொதிகள் என கூறப்பட்ட பொதிகளின் உண்மையான பெறுமதி 5300 ரூபாவாக காணப்படுகின்றது.

இலங்கைக்கான  சீனா தூதுவர் வவுனியா மற்றும் கிளிநொச்சியில் இன்றைய தினம் பொதிகளை விநியோகித்து செல்கின்ற நிலையில் சீன அரசாங்கம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை ஏமாற்றுகின்றதா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.



No comments