யாழுக்கு 11 தூதுவர்கள் விஜயம்


வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 பேர் கொண்ட தூதுவர் குழு இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தது.

இத்தாலிக்கான தூதர் சத்யஜித் ரோட்ரிகோ , எகிப்துக்கான தூதர் மதுரிகா வெனிங்கர், பங்காளதேசத்திற்கான உயர் ஸ்தானிகர் தரமபால வீரக்கொடி , சிங்கப்பூருக்கான உயர் ஸ்தானிகர் செனரத் திசாநாயக்க , பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவர் சந்தன வீரசேன, இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் க்ஷேனுகா செனவிரத்ன, பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகர்  அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேபாளத்திற்கான தூதுவர் எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன, கியூபாவுக்கான தூதுவர் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் அடங்கிய குழுவினரே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம், யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஆகிய இடங்களுக்கு சென்றதுடன் மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியால் தூதர்களுக்கான இரண்டு வார வழிகாட்டல் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் வடக்கு மற்றும் தெற்கு விஜயம் செய்து கள நிலைமைகளை அறிந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments