வரலாற்றுக்கடமையினை நிறைவு செய்த தமிழீழம்!
தமிழர் தாயகம் தடைகளை உடைத்து தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்பட்டு மாவீர செல்வங்களிற்கு தமிழர் தேசம் ஒற்றுமையாக அஞ்சலித்துள்ளது.
நீதிமன்றங்கள் ஊடாக தடைகளை விதித்து மாவீரர் தின நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அரச ஏவல்நாய்களான காவல்துறை களமிறக்கப்பட்டிருந்தது.
எனினும் நீதியின் பால் நின்று நினைவேந்தலிற்கு தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுத்துவிட்டன.
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீதி ஓரத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை காவல்துறையினர்; அகற்றிய நிலையில் அங்குள்ள மக்கள் காவல்துறையுடன்; முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
மேலும், சிலரை காவல் நிலையம் அழைத்துச்சென்றிருந்த நிலையில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தினில் நினைவேந்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகள் அரச காவல்துறையால் பலாத்காரமாக அகற்றப்பட்டிருந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக தடைகள் விதிக்கப்பட்ட போதும் அவற்றினையும் தாண்டி மாவீர செல்வங்களிற்கு அஞ்சலித்து தமிழர் தேசம் தனது வரலாற்று கடமையை ஆற்றியிருக்கின்றது.
Post a Comment