சீன தூதர்:பின்னால் ஓடும் இந்திய தூதர்!

 


சீன தூதர் யாழ்ப்பாணத்தின் தீவக பகுதிகளிற்கு அண்மையில் பயணம் செய்து திரும்பியுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்று(30) யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிற்கு சென்றுள்ளார்.

அவ்வகையில் தனது விஐயத்தின்போது நயினா தீவுக்கு சென்றுள்ள இந்திய தூதர் அங்கு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கும் சென்று வழிபட்டுள்ளார்.

நயினா தீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் முன்னதாக நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கும், பின்னர் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு நடத்தியுள்ளார்.

நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைபடுத்துவது குறித்தும் அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளில் சர்ச்சைக்குரிய வகையில் சீன நிதி உதவியின் கீழ் அமைக்கப்படவிருந்த மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்கள் இந்திய அரசின் அழுத்தங்களால் தடுத்து நிறுத்தப்பட்ருந்தது.

அதனையடுத்து மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை இந்திய அரசு ஏற்படுத்தி வழங்குமென தெரிவிக்கப்பட்ட பல போதும் பலவருடங்கள் கடந்தும் எத்தகைய முயற்சியும் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டிருக்காமை உள்ளுர் மக்களிடையே அதிருப்;தியை தோற்றுவித்துள்ளது.


No comments