ஒரு வாரத்தினுள் 7 பேர் புலியென கைது!
கடந்த ஒரு வாரத்தினுள் வடகிழக்கிலிருந்து ஏழு பொதுமக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மாவீரர் தினத்தை முடக்க இலங்கை அரசு முற்பட்ட போதும் மக்களது பேரெழுச்சி காரணமாக முயற்சி தோல்வியை சந்தித்தேயிருந்தது.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது நடந்திருந்தது.
கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே இலங்கை காவல்துறையினால்; கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடுப்பு விதிகளின் கீழும் குறித்த இளைஞன் மீது இலங்கை காவல்துறையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
Post a Comment