இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இணக்கம்: பணயக் கைதிகள் பரிமாற்றம்!!


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பணயக் கைதிகளை விடுவிக்க ஓர் இணக்கப்பாடு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஆக்டோபர் 7 ஆம் நாள் இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட 240 போில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேரை முதல் நான்கு நாளில் விடுவிக்க ஹமாஸ் தரப்பு இணக்கியுள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலஸ் தீனியர்களை விடுவிக்க இஸ்ரேலும் இணக்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய நீதி அமைச்சகம் அதன் வலைதளத்தில் பாலஸ்தீனிய கைதிகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அரசு உத்தரவின்பேரில், கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் 300 பேர் கைதிகளின் பெயர்கள் உள்ளன.

பணயக்கைத்திகளை விடுவிக்கும் இந்த நான்கு நாட்களில் இருதரப்பும் மோதலை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளன.

இஸ்ரேல் விடுவிக்கும் கைதிகள் பட்டியலில் பெண்களும் சிறுவர்களும் உள்ளனர். இதில் 33 பெண்களும் 123 சிறார்களும் அடங்குவர். சிறுவர்கள் 14 வயதுக்கு உட்பட்டர்கள் என்றும் பெண்களில் 59 வயது ஒருவரும் அடங்குகின்றது. இப்பட்டியலில் ஆண்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் 2021 ஆண்டு முதல் கைது செய்யப்பட்டவர்கள்.

இதற்கான இடைத்தரகர்களாக கட்டாரும் எதிக்கும் இருந்து வருகின்றன. கைதிகள் விடுவிப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

No comments