ரவிராஜ் நினைவு தினம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள ரவிராஜின் நினைவுருவச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து,தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,அரசியல் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன்,வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிசோர்,ரவிராஜின் உறவினர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment