தமிழ்நாடு அரசபாளையத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளையத்தில் மாவீரர் நாள்அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர். தமிழீழ விடுதலையை நெஞ்சில் ஏந்தி களமாடிய வீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றி மருத்துவர் தாயப்பன் அவர்கள் மாவீரர்களின் ஈகங்கள், வீர களமுனைச் செய்திகள், ஈழ வரலாற்றில் தமிழினத்தின் எழுச்சிகள் பற்றி விரிவான உரை ஆற்றி, மாண்ட விடுதலை வீரர்களை தமிழர்களின் நெஞ்சில் படமாகச் செதுக்கினார். தொடர்ந்து மாவீரர்களின் எழுச்சி பாடல்களுக்கு கலைநிகழ்வுகள் நடந்தேறின. நிகழ்சிகளை தமிழ் தமிழர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

No comments