தேசியத்தலைவரிடம் மன்னிப்பு! மனம்வருந்திய திமுக MP!


தமிழ் நாட்டின் தி பெட்ரல் என்ற ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு தென் சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேர்காணல் அளித்தார். அதில் ’நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும் ?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மேதகு தேசிய தலைவர் பிரபாகரன்” என்றும், ’அவரிடம் நீங்கள் என்ன கேட்பீர்கள்?’என்ற கேள்விக்கு, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கோருவேன் என்றும் கூறி இருந்தார். 

தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழச்சியின் கருத்து தொடர்பாக  கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் “பிரபாகரனை புகழ்வது காங்கிரஸில் யாருக்கும் பிடிக்காது. 17 தமிழர்களுடன் சேர்த்து ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததை மழுப்புவதை ஏற்க முடியாது. பிரபாகரன், வீரப்பன் தமிழ்தேசம் என்பது இந்துத்துவா தேசியவாதத்தை போன்றது” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அந்த நிகழ்வுக்கு காரணம் தி மு க தான் என்ற ஒப்புதல் வாக்குமூலமே இது என்பதை உணர்த்துகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ? இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை, முன்னாள் பிரதமரை கொன்ற ஒரு இயக்கத்தை வழி நடத்திய ஒருவரை, தேசிய தலைவர் என்று சொல்வது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சொல்வது தி மு கவின் ஆணவம். இப்போது கூட கங்கிரஸ் தலைவர்களுக்கு ரோஷம் வரவில்லையென்றால், அது வெட்கக்கேடே” என தெரிவித்துள்ளார்.தமிழச்சி தங்கபாண்டியனின் பிரபாகரன் குறித்த கருத்துக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜகவிடம் இருந்து ஒரு சேர எதிர்ப்பு எழுந்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுகவில் இருக்கும் ஓர் தமிழ் உணர்வு மிக்க ஈழப்பற்றாளர்,எனினெம் இவரது கருத்துக்கள் திமுகாவினரிடையேயும் சலசலப்பை கிளப்பியுள்ளது, இது உட்கட்சிப் பூசல்களினின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments