படி படியாக ஏறும் செல்வம்!

 


முழு வியாபாரியாக மாறிவிட்ட ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தனது உள்ளக தேவைகளிற்காக தற்போது வீடு வீடாக படியேற தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே வவுனியா சீனி தொழிற்சாலைக்காக ரணிலின் காலில் வீழ்ந்த அவர், தற்போது அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஒரே நாளில்  மீண்டும் மீண்டும் அமைச்சில் சந்தித்துள்ளார். 

மன்னார் கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறை விடயம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் நடத்திய கலந்துரையாடலின்போது செல்வமும் இணைந்துள்ளார்.

எனினும் தனக்கு நெருங்கிய சிலருக்கான கடலட்டை பண்ணைகளிற்கான அனுமதிக்காகவே டக்ளஸை சந்தித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


No comments