இலங்கையில் சீனி இல்லை



இலங்கையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் காரணமாக பல கடைகளில் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு தொடர்புடைய பல துறைகளில் உள்ள நுகர்வோர், உற்பத்தியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 295 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 275 ரூபாவாகவும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 350 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

சந்தையில் சீனி தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் மிட்டாய் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

No comments