மேய்ச்சல்தரை:ஆமி உட்பட இருவர் கைது!



மட்டக்களப்பு மேய்ச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது  துப்பாக்கி சூடு நடாத்திவந்த முன்னாள் இராணுவ சிப்பாய் உள்ளிட்டசட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவர் கைதாகியுள்ளனர்.அவர்களிடமிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கால்நடைகளை கொன்றுவந்துள்ளதுடன்  கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து வாயை கிழித்து வந்துள்ளனர்.

அதனையடுத்து கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான  நேற்று வியாழக்கிழமை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவரே கைதாகியுள்ளனர்.


No comments