மோசடி: நிரம்பி வழியும் இலங்கை கிரிக்கெட்சபைஅர்ஜுனா ரணதுங்கா தலைமையில் 6 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் சபைக்கு  இடைக்கால சபை நியமிக்கப்பட்டு இருக்கின்றது 

குறிப்பாக இலங்கை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே அவர்களின் மூத்த மகன்  ராஹித ராஜபக்சே அவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றார் 

இந்த  ராஹித ராஜபக்சே  டினேஸ் சாப்டர் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் ) சகிதம் 2,000 மில்லியன் பண மோசடியில்   ஈடுபட்டு இருந்தார் என  அம்பலப்படுத்தி இருந்தது 

அதே போல  ராஹித ராஜபக்சே நள்ளிரவில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி தப்பி ஓடிய நிலையில் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார் 

இதன் பிண்ணனியில் கடந்த மாதம் விளையாட்டு துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட ராஹித ராஜபக்சே உள்ளடங்கலான  கிரிக்கெட் ஒருங்கிணைப்புக் குழுவை சந்திக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மறுத்து இருந்தது 

குறிப்பாக மேற்படி குழுவை முன்னிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இலங்கை கிரிக்கெட்டின் அரசியல் தலையீடுகள் , அதன் சுயாதீனம் குறித்தும  கேள்வி எழுப்பி இருந்தது. 

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் (Sri Lankan Cricket) இடைக்கால சபைக்கு  ராஹித ராஜபக்சே நியமிக்க பட்டு இருக்கின்றார் 

இது போதாதென்று கடந்த கோட்டாபய ராஜபக்சே அரசாங்கத்தில் வட மேல் மாகாண ஆளுநராகவிருந்த  முஸாமில் அவர்களின் மகன் திரு ஹிஷாம் ஜமாலுதீன் அவர்களும் பெயரிடப்பட்டு  இருக்கின்றார் 


No comments