முன்னணி சளைக்காது ஆர்ப்பாட்டம்!யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் கஜினமகா உற்ச நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் ஆதரவு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பெருமளவிலான சிங்கள யாத்திரீகர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வழிபாட்டிற்கு படையெடுத்திருந்தனர்.

"அவ்வேளையில் போராட்டகாரர்கள் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது அதிகளவிலான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தபோதும் அதனை தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கில் சிங்கள யாத்தீரீகர்கள் படையெடுத்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த போது பத்திற்கும் குறைவான முன்னணி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments