2024: நம்பிக்கையுடன் ரணில் அரசு!



இலங்கையில் 2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 2024 ஆம் ஆண்டை பலமான பொருளாதார ஆண்டாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக மேற்கொள்ள ஆரம்பிக்கும் வருடமாக, 2024 ஆம் ஆண்டு அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.”என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

No comments