திடீர் மரணங்களால் அதிரும் யாழ்ப்பாணம்வடமராட்சி கற்கோவளம் புனிதநகர் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 22) எனும் இளைஞர் இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டில் வசித்து வந்த நிலையில் நடந்து வந்த போது விழுந்துள்ளார். உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உடுப்பிட்டி வடக்கு ஜே/353 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்தவர்.

குமாரசாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த கிராம சேவகர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

No comments