மனம் நிறையும் மாவீரர் பெற்றோர்!
மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வை இம்முறை தமிழ் கட்சிகள் போட்டி போட்டறவாறாக முன்னனெடுத்துவருகின்றன.
வடமராட்சி பருத்தித்துறை மாலு சந்தியில் முன்னணி ஒருபுறம் கௌரவிப்பினை முன்னெடுக்க மறுபுறம் வட்டுக்கோட்டையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை செயலாளர் பற்றிக் தனுஷ் தலைமையில் உணர்வுபூர்வமாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது தாயக விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிராக்கிய மாவீரர் பெற்றோர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக மாவீரர்களின் நினைவாக மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி மதிப்பளிக்கபட்டதோடு
தொடர்ச்சியாக முன்னாள் போராளி செழியனால் மாவீரர்களின் நினைவுரை முன்னெடுக்கப்பட்டது.
இறுதியாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிய போசனமும் பரிமாறபட்டது.
Post a Comment