ஒன்றித்த தீர்வாம்?

 


தமிழீழ கோரிக்கையினை சிதைத்தும் ஒன்றிணைந்த இலங்கைக்குள் அரசியல் தீர்வை வலியுறுத்தியும் காய் நகர்த்தல்களை கொழும்பு மைய தூதுவராலயங்கள் முடுக்கிவிட்டுள்ளன.

அவ்வகையில் ஒன்றித்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டும் எனும் மக்கள் பிரகடனம் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது.

அமெரிக்க ஆதரவு அரசசார்பற்ற நிறுவனமொன்றால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக வடக்கிழக்கில் கடந்த ஆண்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அதன் தொடர்ச்சியாக மக்கள் பெயரில் பிரகடனமும் வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வாறு பிரகடனம்  வெளியிடப்பட்டதன் முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வும் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் மக்கள் பிரகடனம் எனும் நூல் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.  

பொங்கு தமிழ் பிரகடனம்,வட்டுக்கோட்டை பிரகடனமென வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனங்கள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒன்றித்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டும் எனும் மக்கள் பிரகடனம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பொது மக்கள், குடிசார் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள், கல்வி மான்கள், மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்றோர் பெயரில் முன்னெடுக்கப்படுகின்றது


No comments