ஒரு கண்ணில் வெண்ணெய்: மறுகண்ணில் சுண்ணாம்பு

 


உள்ளுர் இழுவைப்படகுகளிற்கு அரச கடற்றொழில் அமைச்சர் அனுமதித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி இந்திய மீனவர்களிற்கு எதிராக கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலகம் முன்பாக   இன்று வெள்ளிக்கிழமை; ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டகாரர்களால் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மாவட்ட மேலதிக அரச அதிபர் ஊடாக மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.

இதனிடையே உள்ளுர் பெரும் தொழிலதிபர்கள் இயக்கும் இழுவைப்படகுகளிற்கு இலங்கை கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்திய இழுவைப்படகுகளிற்கு எதிராக குரல் எழுப்புவது கேள்விக்குள்ளாகியுள்ளது.

No comments