ஒலியை விட 27 மடக்கு வேகத்தில பயணிக்கும் அவன்கார்ட் ஹைப்பர்சோனி கிளைடு சோதித்தது ரஷ்யா
ரஷ்யாவின் ரொக்கெட் படைகள் அணுசக்தி திறன் கொண்ட அவன்கார்ட் ஹைப்பர்சோனி கிளைடு (nuclear-capable "Avangard" hypersonic glide) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தெற்கு ரஷ்யாவில் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து பார்த்துள்ளது.
இது ஒரு புதிய தலைமுறை ஆயுதம். இந்த ஏவுகணை இலக்கை நெருங்கும் போது அவன்காட் கிளைடு வாகனம் ரொக்கெட்டில் இருந்து பிரிந்து ஒலியின் வேகத்தை விட 27 மடங்கு அதிவேகத்தில் (மணிக்கு சுமார் 21,000 மைல்கள் அல்லது மணிக்கு 34,000 கிலோமீற்றர்) ரொக்கெட் பாதையிலிருந்து விலகி பதைகளை மாற்றி மாற்றி ஏமாற்றிச் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
அவன்கார்ட் ஹைப்பர்சோனிக் கிளைடு ஏவுகணை குறித்து ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2018 ஆம் ஆண்டில் அறிவித்தார். இந்த ஏவுகணை அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புக்களைத் தாண்டிச் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்டது எனப் பெருமையுடன் கூறியிருந்தார்.
மிகப் பெரிய அணுசக்தி சக்திகளான ரஷ்யாவும் அமெரிக்காவும், பனிப்போர் ஆயுதப் போட்டியைக் குறைக்கவும், அணு ஆயுதப் போரின் அபாயத்தைக் குறைக்கவும் முயன்ற ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளன.
Post a Comment