அண்மையில் தமிழகம் சென்றவர் யாழில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என கண்டறிவு


யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள நபர் , கொலை மற்றும் குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து படகொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படகொன்றில் புறப்பட்ட யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த நபர் மறுநாள் சனிக்கிழமை காலை தனுஷ்கோடி பகுதியில் கரை இறங்கிய நிலையில் தமிழக கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டார். 

அதனை அடுத்து குறித்த நபரை மண்டபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , இலங்கையில் பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் அங்கு வாழ முடியாது என்பதால் படகொன்றில் தமிழகம் வந்ததாகவும் , அதற்காக படகோட்டிக்கு 2 இலட்ச ரூபாய் பணம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த நபரின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியான நிலையில் , குறித்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும் , சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றிலும் வேறு சில குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த தகவல் தமிழக பொலிஸாருக்கு , இலங்கை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் தற்போது புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments