பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தெரிவிக்கும் தென்னாபிரிக்கா, துருக்கி, ஏமன்


தென்ஆப்ரிக்காவில் காசாவுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி இடம்பெற்றது. இதநேரம் ஏமன் மற்றும் துருக்கியிலும் பாலஸ்தீனிய ஆதரவு பேரணிகள் நடைபெற்றன. 

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் நெல்சன் மண்டேலாவின் பேரன் கோசி மண்டேலா கலந்து கொண்டார். இந்த பேரணியில் ஆயிரக்கணாக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற கோசி மண்டேலா இஸ்ரேலுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளை இரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதே போன்று ஏமன் நாட்டு தலைநகரான சனாவில் நடைபெற்ற பிரமாண்ட ஆதரவு பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கொடிகளுடன் திரண்டு பங்கேற்றனர். அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டபடி சென்றனர்.

இதனிடையே ஹவுத்தி அமைப்பினர் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்து உள்ளனர்.

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக துருக்கியின் முக்கிய நகரங்களான இஸ்தான்புல், அங்காராவிலும் பேரணிகள் நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் பங்கேற்றனர்.

இதேநேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற பேரணிகளை அரசாங்கம் ஒடுக்கி வருகிறது. அத்துடன் ஆதரவாளர்களைக் கைது செய்து சிறையிலும் அடைத்து வருகிறது.

No comments