50% மானிய அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு Solar நீர்ப்பம்பிகள்


50% மானிய அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு Solar நீர்ப்பம்பிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அதன் போது, தற்போதைய விலைவாசி ஏற்றத்தால் மாற்றுவலு நீர்ப்பம்பிகளை பயன்படுத்தும் விதமாக Solar Water Pumps களை பெற்றுத்தருவது தொடர்பாக யாழ் மாவட்ட விவசாயிகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விவசாய அமைச்சரின் கவனத்துக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கொண்டு சென்றிருந்தார்.

அதற்கு , 50% மானிய அடிப்படையில் அவற்றை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

No comments