24 நாளாகத் தொடரும் இஸ்ரேல் - காசாப் போரில் இதுவரை 9,587 பேர் உயிரிழப்பு


இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் முடிவின்றி தொடர்ந்த வண்ணம் உள்ளது. இப்போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,500 ஆக உயர்ந்துள்ளது. கடந்தது 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீதும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் இதுவரை 8,005 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,587 ஆக அதிகரித்துள்ளது.


No comments