ஹமாசின் 150 சுரங்க நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!!


காஸா மீது இதுவரை இல்லாத அளவிற்கு நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த தயாராகிவரும் இஸ்ரேல் இராணுவத்திற்கு உதவ, ஹமாஸின் சுரங்கங்கள் மற்றும் பதுங்கு குழிகளை குறி வைத்து இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்களை பயன்படுத்தி நிலத்தடியில் உள்ள 150 ஹமாஸ் சுரங்க நிலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அத்துடன் ஹமாஸ் போராளிகளையும் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்தது.

தொடர் வான் தாக்குதலால் காஸாவில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


No comments