18 பேரைக் கொன்ற சந்தேகநபர் சடலமாக மீட்பு!!


அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவிஸ்டன் நகரில், பார், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 18 பேரை கொன்ற ரோபர்ட் கார்ட் என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய ரொபர்ட் கார்ட்டின் புகைப்படம் மற்றும் அவர் ஓட்டிவந்த காரின் புகைப்படத்தையும் வெளியிட்டு தேடிவந்த காவல்துறையினர், லிஸ்பன் நீர்வீழ்ச்சி அருகே துப்பாக்கி குண்டு காயங்களுடன் உடலை கண்டுபிடித்தனர்.

மருத்துவ பரிசோதனையில், ரோபர்ட் கார்ட் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளதாக மெய்னி மாகாண ஆளுநர் கூறினார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளி இரவு 7.45 மணிக்கு உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடனடியாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவிஸ்டன் நகரில், பார், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 18 பேரை கொன்ற ரொபர்ட் கார்ட் என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்தபுதன்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய ரொபர்ட் கார்ட்டின் புகைப்படம் மற்றும் அவர் ஓட்டிவந்த காரின் புகைப்படத்தையும் வெளியிட்டு தேடிவந்த காவல்துறையினர், லிஸ்பன் நீர்வீழ்ச்சி அருகே துப்பாக்கி குண்டு காயங்களுடன் உடலை கண்டுபிடித்தனர்.

மருத்துவ பரிசோதனையில், ரொபர்ட் கார்ட் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளதாக மெய்னி மாகாண கவர்னர் கூறினார். உள்ளூர் நேரப்படி வெள்ளி இரவு 7.45 மணிக்கு உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடனடியாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments