ஹமாஸின் பிடியிலிருந்த பெண் பிணைக் கைதி இஸ்ரேலியப்படைகளால் மீட்பு


ஹமாஸால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பெண் சிப்பாயை மீட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் (IDF) இஸ்ரேல் பாதுகாப்பு ஆணையமும் கூட்டறிக்கையில் அறிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேலிய படைகளின் தரைவழித் தாக்குதலில் இரவு விடுவிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலியப் பெண் சிப்பாய் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டார். நன்றாக இருக்கிறார். மேலும் அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்க அனைத்து நடவடிக்கையும் தொடர்ந்து செய்வோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments