இஸ்ரேலின் நீர் விநியோக அறிவிப்பு ஒரு விளம்பரம்!! மின்சாரம் இல்லாம் எப்படி பம்புகள் இயங்கமுடியும்??


காசாப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட தண்ணீரை திடீரென இஸ்ரேல் நிறுத்தியதை அடுத்து சர்வதேசத்தினால் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக இன்று இஸ்ரேல் குடிநீரைத் திறந்து விட்டுள்ளதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு விளம்பரம் தேடும் ஒரு அறிவிப்பாகும் எனப் பாலஸ்தீனியர்கள் கூறியுள்ளனர். கடந்த ஏழு நாட்களாக காசாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் தண்ணீர்த் தொட்டிகள் அழிக்கப்பட்டும் தேசமடைந்தும் போயுள்ளன. அத்துடன் தண்ணீர் தொட்டிகள் இயங்குவதற்கு மின்சாரம் இல்லாததால் தண்ணீர் நிரப்பும் பம்புகள் இயங்கவில்லை என பாலஸ்தீனியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments