இரவு இரவு விடுதியில் தீ: ஸ்பெயினில் 13 பேர் பலி!!


ஸ்பெயினின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் உள்ள விடுதியில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல  தீ விபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

முர்சியா நகர சபை முதலில் தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 40 தீயணைப்பு வீரர்களையும் அனுப்பியது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடினமாக உழைத்ததாக மாநரக சபை அறிவித்தது.

இன்று திங்கட்கிழமைக்குள் காணாமல் போனவர்கள் அனைவரும் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முர்சியா சிட்டி ஹால் திங்களன்று மூன்று நாட்கள் துக்கம் மற்றும் ஒரு நிமிட மௌனத்தை அறிவித்தது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

ஏர் கண்டிஷனிங் வென்ட்கள் வழியாக தீ பரவியதாகத் தெரிகிறது என்று முர்சியாவில் உள்ள மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி பிரான்சிஸ்கோ ஜிமெனெஸ் கூறினார்.

No comments