நீதித்துறைக்கு நீதிவேண்டி கிளிநொச்சியில் போராட்டம்


நீதவான் சரவணராஜா நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிராகவும் நீதித்துறையின் சுயாதீனம் காக்கவும் தமிழ் தேசத்தின் இருப்பை காக்கவும் கோரி கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக, இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில், கிளிநொச்சி நகர வர்த்தகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

No comments