ரஷ்யாவில் இஸ்ரேலியர்களைச் தேடி விமான நிலையத்திற்குள் புகுந்த கும்பம் அட்டகாசம்!!

ரஷ்யாவின் டகெஸ்ரன் (Dagestan) பிரதான விமான நிலையத்தில் இஸ்ரேலில் இருந்து விமானம் ஒன்று வந்து இறங்கியதாகவும் அதில் இஸ்ரேலியர்கள்

இருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதை அடுத்து திடீரென இஸ்ரேலியர்களைத் தேடி ஒரு கும்பல் புகுந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

டகெஸ்ரன் விமான நிலையத்தில் சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்திற்கு வந்துக் கொண்டிருந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு தடையை மீறி உள்ளே நுழைந்த அந்த கும்பல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை கைப்பற்றியது. இஸ்ரேலில் இருந்து விமானம் வந்து இறங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த கும்பல் இஸ்ரேல் பயணிகளைத் தேடியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் பயணிகளின் பயணிகளின் கடவுச்சீட்டுக்களைச் சோதித்ததாகவும் கூறப்படுகிறது. விமான ஓடுபாதையில் விமானங்களை வழிமறித்தும் விமானத்தின் இறக்கைகளில் ஏறியும் அந்தக் கும்பல் செய்த வன்முறைகளின் காணொளிப் பதிவுகள் வெளியாகியுள்ளன. பின்னர் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அவர்கள் விமானநிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். 

No comments