மனித முகங்கள் செலுக்கப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான பாறை கண்டுபிடிப்பு


2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாறையில் செதுக்கப்பட்ட பழங்கால மனித முகங்கள் அமேசன் நதியில் கண்டு பிடிக்கப்பட்டது.

அமேசன் நதியில் கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டது. இதனால் நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் முகங்கள் செலுக்கப்பட்ட பாறை ஒன்று வெளிப்பட்டது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜெய்ம் டி சந்தனா ஒலிவேரா இந்த கண்டுபிடிப்பை முன்னிலைப்படுத்தினார் மற்றும் பல்வேறு தனித்துவமான சிற்பங்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

ஒரு குறிப்பிட்ட பகுதி பாறையில் பளபளப்பான பள்ளங்களை வெளிப்படுத்துகிறது, ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே பழங்குடியின மக்கள் தங்கள் அம்புகள் மற்றும் ஈட்டிகளை கூர்மைப்படுத்த பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

இந்த வேலைப்பாடுகள் வரலாற்றுக்கு முற்பட்டவை, அல்லது காலனித்துவ காலத்திற்கு முற்பட்டவை. அவற்றை நாம் துல்லியமாகத் தேதியிட முடியாது. ஆனால் அந்த பகுதியில் மனித ஆக்கிரமிப்புக்கான சான்றுகளின் அடிப்படையில். அவை சுமார் 1,000 முதல் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்று நாங்கள் நம்புகிறோம், என்று ஒலிவேரா  கூறினார்.

2010 ஆம் ஆண்டில் மக்கள் முதன்முதலில் அங்குள்ள சிற்பங்களை கவனித்ததாகவும் ஒலிவேரா மேலும் தனது நேர்காணலில்  கூறினார்.

ரியோ நீக்ரோ மற்றும் சோலிமோஸ் ஆறுகள் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையில், அமேசான் ஆற்றின் வடக்குப் பகுதியில், பொன்டோ தாஸ் லேஜஸ் என்று அழைக்கப்படும் பாறைப் பகுதி அமைந்துள்ளது.


No comments