காசாவின் அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பு விபரங்கள்


2.3 மில்லியன் மக்கள் வாழும் காசப் பகுதியில் 1.7 மில்லியன் மக்கள் அதிகள் முகாங்களில் வாழுகின்றனர். இப்பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திவரும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 2,215 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8,714 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 724 குழுந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களில் மக்கள் வாழ்ந்த 5.540 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 64,283 மக்கள் குடியிருக்கு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

  • 90 பல்லைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள் உட்பட கற்கை வசதிகள் சேதமடைந்தள்ளன.

  • 11 மசூதிகள் உட்பட 18 வழிபாட்டு ஸ்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

  • 19 சுகாதார நிலையங்கள் செயலற்றுப் போயுள்ளன.

  • 20 நோயாளர் காவுவண்டிகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

  • 11 குடிநீர் சுகாதார வசதிகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

No comments