ஈராக்கில் உள்ள அமெரிக் வான்படைத் தளம் மீது தாக்குதல்!!
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க வான்டைத் தளத்தின் மீது நான்கு ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கா மற்றும் பிற சர்வதேசப் படைகளை நடத்தும் ஈராக்கின் ஐன் அல்-அசாத் விமானத் தளத்தின் மீது நான்கு கத்யுஷா ரொக்கெட்டுகள் வீசப்பட்டது.
இந்தத் தாக்குதலால் தளத்திற்குள் ஏதேனும் உயிர்ச்சேதம் அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
இன்று முன்னதாக, மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், காசாவில் இஸ்ரேல் போர் தொடர்பாக பிராந்திய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் இந்த மாதத்தில் 14 முறை ட்ரோன்கள் மற்றும் ரொக்கெட்டுகளால் தாக்கப்பட்டுள்ளன.
ஈராக்கில் சுமார் 2,500 அமெரிக்கப் படைகள் உள்ளன.
Post a Comment