பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளையை சேர்ந்த சந்திமா ரணசிங்க (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விடுமுறையில் வீடு சென்றிருந்த குறித்த பெண் உத்தியோகஸ்தர், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை, வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானார்.

விபத்தில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments