சென்னையில் இருந்து குடத்தனை வந்த மூவர் கைது!


தமிழக கடற்தொழிலாளர்களின் படகின் மூலமாக, சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது 1990 ஆம் ஆண்டு குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாயாரும் அவரது ஆண் பிள்ளையும், பெண்பிள்ளையும் தமிழகத்திற்கு சென்று சென்னையில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர். 

அந்நிலையில் , சென்னையில் தொடர்ந்து வாழ முடியாத நிலையில் மூவரும் தமிழக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் படகு மூலம், யாழ் வடமராட்சி குடத்தனை பகுதியில் வந்திறங்கி உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிசாரால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments