யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர்


இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 யாழ். பொதுநூலகத்திற்கு, நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  விஜயம் மேற்கொண்டிருந்த போது, யாழ் மாநகர ஆணையாளர் திரு. ஜெயசீலன் உயர்ஸ்தானிகரை வரவேற்றார். 

அதனை தொடர்ந்து உயர்ஸ்தானிகர் பொது நூலகத்தின் உருவாக்கம், யாழின் முக்கியத்துவம், பழமை வாய்ந்த பேப்பர் பிரிண்டிங் மெசின், இந்திய கோர்னர்,  சிறுவர் பகுதிகளையும் பார்வையிட்டார்.

அத்துடன், சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு அஞ்சல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட முத்திரை கண்காட்சியையும் பார்வையிட்டார்.

வடமாகாண அஞ்சல் திணைக்கள அதிபர் திருமதி.மதுமதி முத்திரை வெளியிட்டு வைத்ததுடன், முதல் முத்திரையை யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் உயர்ஸ்தானிகருக்கு வழங்கி வைத்ததுடன், நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.






No comments