இந்தியா – இலங்கை கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

  


இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுவதாக இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்திலிருந்து கப்பல் போக்குவரத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி தொடங்கவிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென இரத்து செய்யப்பட்டு 12ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இதன்பின்னர் நிர்வாக காரணத்திற்காக மீண்டும் 14ஆம் திகதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை, காணொளிக்காட்சி மூலம் டெல்லியிலிருந்து பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணொளிக் காட்சியூடாக இணைந்து, வாழ்த்து தெரிவித்திருந்தார்.

No comments