மருத்துவத்திற்கான நோபல் பரிசை இருவர் வென்றனர்!


ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த காடலின் கரிகோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இவர்களின் கண்டுபிடிப்பு கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான முதல் mRNA தடுப்பூசிகளுக்கு நேரடியாக வழிவகுத்தது. பின்னர் தடுப்பூசிகள் ஃபைசர் மற்றும் மாடர்னாவால் தயாரிக்கப்பட்டது.

நவீன காலங்களில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த கொவிட்-19 க்கு தடுப்பூசி உருவாக்குவதில் அவர்களின் பங்களிப்புக்கு இப்பரிசைப் பெற்றனர் என்று திங்களன்று ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

காடலின் கரிகோ ஹங்கேரியில் உள்ள சாகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும் உள்ளார். ட்ரூ வெய்ஸ்மேன் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கரிகோவுடன் இணைந்து தனது பரிசை வென்ற ஆராய்ச்சியை நடத்தினார்.

பரிசுகளை உருவாக்கிய விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபலின் 1896 ஆம் ஆண்டு இறந்த ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் தேகதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் முறையான விழாவில், டிப்ளமோ, தங்கப் பதக்கம் மற்றும் $1 மில்லியன் காசோலையை மன்னர் கார்ல் XVI குஸ்டாஃப் அவர்களிடமிருந்து இவ்விருவரும் பெறுவார்கள். 

No comments